இணைய மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள்!!


இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார்.


தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


பொதிகள், பரிசில்கள் தங்களிடம் உள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறு குறுஞ்செய்திகளை அனுப்பி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறும், தனிப்பட்ட தரவுகளை வௌியிட வேண்டாமெனவும் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல அறிவுறுத்தினார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.