வலியோடு நோன்பிருந்தவனுக்காக வரலாற்றுக் காவடி!

 


தியாகத்துக்கான காவடி  தமிழர்

தாயகத்தின் காவடி.

மனக்காயத்தோடு உறங்கியவனின்

மரியாதைக்கான காவடி. 


கடவுளுக்கான காவடி  மக்கள்

கண்ணீரின் காவடி.

நினைவுகளைச் சுமந்தை செல்லும்

நெஞ்சங்களின் காவடி. 


திலீபனுக்கான காவடி தேச

வீரனுக்கான காவடி.

வலியோடு நோன்பிருந்தவனுக்காக

வரலாற்றுக் காவடி. 


அகிம்சைக்கான காவடி பெரும்

அநீதிக் கெதிரான காவடி.

வம்சங்கள் செடில் குத்தியாடும்

விடுதலைக்கான காவடி. 


பருக நீர்மறுத்து பலநாள்

பசி இருந்தவனுக்கான காவடி.

முருகன் வாசலில் மூச்சுவிட்ட

புதல்வனுக்கான  நாளடி❗ 


-பிறேமா(எழில்)-




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.