தமிழர் தேசம் உணர்ந்து விட்டதை அடையாளம் காட்டியது!

 


விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்தும் மாவீரர்களை நினைவு கூர்வதற்கென ஒரு பொது நாளை அறிவிக்காத தலைவர் இந்திய வல்லாதிக்கப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கி தாம் எல்லோரும் வீரச்சாவடையும் நிலை நெருங்கிய வேளையில் முதலாவது மாவீரர் தினத்தை அறிவிக்கிறார்.


வரலாற்றின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.


ஆனால் போராட்டத்தை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் தலைவரின் சிந்தனைத் தெளிவு அது.


மாவீர்களை நினைவு கூர்வதென்பது வெறும் ஒரு சடங்கு அல்ல என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


மாவீரர்களை நினைவு கூர்வதின் பெறுமதி என்பது வரலாற்றில் வைத்து அதைப் புரிந்து கொள்ளல் என்பதே அதன் உண்மையான உள்ளடக்கம் ஆகும்.


அது தலைமுறை கடந்து இலக்கை அடையும்வரை போராடுதல் என்பதனை ஒன்றிணைக்கும் ஒரு தொடர் இயக்கமாகும்.


ஆனால் இதைத் தமிழர் நாம் "சரியாகப் புரிந்து கொண்டோமா?" என்ற சந்தேகத்துடனேயே இதுவரை கால மாவீரர் நாள்/ மே 18 நினைவு நாள்/ கரும்புலிகள் நாள்/ திலீபன் நினைவு நாள் உட்பட அனைத்து மாவீரர் நாட்களையும் கடந்து போக வேண்டியிருந்தது.


முதல் தடவையாக 2019 வது வருட திலீபன் நினைவு நாள், நினைவு கூர்தலின் பெறுமதியைத் தமிழர் தேசம் உணர்ந்து விட்டதை அடையாளம் காட்டியது.


இந்த வருடம் அது அதன் உச்சத்தை எட்டி அதற்கேயுரிய அரசியல் உள்ளடக்கங்களுடன் /எழுச்சியுடன் / உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.


இனி இந்த இனத்தை வீழ்த்துவது கடினம்.


வெல்வோம் 🔥 வென்றே தீருவோம் 🔥


'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்' ❤️


#திலீபம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.