ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!


பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி குறித்த கடனுதவின் முதல் தவணையாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.