நினைவேந்தல்கள் தடை!!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் சிலவற்றை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழர் மக்களுக்காய் தன்னுயிரை ஈந்த திலீபனை நினைவு கூருவதற்காக கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நினைவேந்தல்கள் அல்லது பூஜைகள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம், தந்தை மாரிமுத்து சத்யவேல் உட்பட நினைவேந்தலில் கலந்துகொள்ளவுள்ள அனைவருக்கும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருதானை பிரதேசத்தில் இது தொடர்பான நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை