பொறுமையே அன்பின் ஆதாரம்!!
#கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில்.. அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது..!
ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள்..
அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது.. என்பதே அது..
கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்பதுமில்லை..!
காலங்கள் கடந்து செல்ல..
மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்.. "உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்"..!
அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள்.. கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், 10 லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்..!
மனைவி விளக்கினாள்: "நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள்..
நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள்..
அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்"..!
மகிழ்ந்து போனான் கணவன். 'இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே.. அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!'
"அது சரி, இந்த 10 லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா" கணவன் கேட்டான்..!
மனைவி சொன்னாள்.. "ஓ, அதுவா.. அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்..!
ஒரு பொம்மையின் விலை ரூ100..
எத்தன தடவை
என்னை கோபப்படுத்திருக்கிறீர்கள்..
என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்..!
பொறுமைக்கு..
பொம்மை விலையானது..
அருமைக்கு.. அன்பே நிலையானது..!
கணவன் கண்ணில்
கண்ணீர் கரைபுரண்டது..!
தளர்ந்த கையும் அங்கே..கண்ணீரை துடைத்தது..
ஆண்மகன் அழக்கூடாதென்று..!
கருத்துகள் இல்லை