இலங்கையில் புதிய இரண்டு வகை மாதுளைகள்!!!
இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
புதிய மாதுளை வகைகளை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு அறுவடை செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை