உரிமைக்கும் இனவிடுதலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியலுக்க்கு மக்களை தயார்படுத்தியது!
2009 க்கு பின் தமிழ்தேசிய அரசியல் யதார்த்தம், சந்தர்ப்பவாதம், புலி நீக்க அரசியல் என்ற எல்லா பரிணாமங்களையும் எடுத்து அது தமிழ்தேசிய நீக்க அரசியலாக மாறியது
அதன் விளைவாக மக்களுக்கும் அரசியலுக்கும் பாரிய இடைவெளி உருவாகியது. கூட்டமைப்பு சிதறியது பல புதிய கட்சிகள் உருவாகியது
அப்போதும் தமிழ் மக்களை ஒற்றுமையாக்கவும் தமிழ் தேசிய அரசியலுக்கு மக்களை தயார்ப்படுத்தவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனியாக போராடியது
சந்தர்ப்பவாத யதார்த்தம் புலி நீக்க அரசியல், சுயலாபங்கள், என அனைத்தையும் தகர்த்து
உரிமைக்கும் இனவிடுதலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியலுக்க்கு மக்களை தயார்படுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் இன்று மக்கள் ஓரளவுக்கு தயார்படுத்தியிருக்கிறோம்
13 வருடமாக புலிநீக்க அரசியலை செய்து தமிழ்தேசிய நீக்கம் செய்த அரசியல்வாதிகளும் ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் போராட தலைப்படும் மக்களும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் சேர்ந்து போராடுகிறார்கள் என்றால் தமிழர்கள் ஒற்றுமையாக போராடுகிறார்கள் என ஒரு கருத்துருவாக்கமும் உளவியல் சிந்தனையும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது
இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சாதாரண மக்கள், தாயகத்தில் இருக்கும் மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகங்கள் என பலருக்கும் பல்வேறுவிதமான நிலைப்பாடுகள், பார்வைகள், இருக்கலாம்.
ஆனால் போராட்டகளங்களுக்கு துணிந்து போராடதலைப்படும் மக்களும், மக்களை தயார்படுத்தும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் போராட்டகளங்களில் திரைமறைவில் பலவீனப்படுத்தபடுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
ஒற்றுமை என்னும் வெற்றுக்கோசத்தில் அதே தமிழ்தேசிய நீக்கத்தை செய்யவிரும்பும் தரப்புக்கள் அரசியல் லாபம் தேடிக்கொள்கிறார்கள்
மக்களும் தேசிய உணர்வாளர்களும் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்கவேண்டும்
உண்மையும் நேர்மையுமாக மக்களை தயார்படுத்தும் ஒருவனாக மனவருத்தத்தில் பதிவிடுகிறேன்.
கருத்துகள் இல்லை