இசைக்குயில் கில்மிஷாவின் மற்றும் ஒரு பேராற்றல்!!

 


யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று, சரிகமப நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு திறமைகொண்ட போட்டியாளர்களுடன்  போட்டியிட்டுவரும் கில்மிஷா  வாராந்தம் ஒவ்வொரு விதமான பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திவருகிறார்.

அண்மையில்,  அரண்மனைக்கிளி திரைப்படத்தில் , இசைஞானி இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற "ராசாவே உன்னை விடமாட்டேன்...." என்கிற எஸ். ஜானகியின் குரலில் வெளியான அப்பாடலை கில்மிஷா மிகச் சிறப்பான முறையில் பாடி, நடுவர்களை அசரவைத்துள்ளார். இப்பாடல் பாடியதும், நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான நயங்களை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கவைப்பதில் கில்மிஷா அபார திறன் கொண்டவராக விளங்குகிறார்.


இவர்,  தமிழ் திரை உலகில் மிளிரும் பின்னணிப்பாடகியாக வலம் வருவார் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.