மேல் மாகாணத்தில் நான்காயிரம் ஆசிரியர் நியமனங்கள்!!


மேல் மாகாணத்திற்கு சுமார் 4,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருவதாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.


எதிர்காலத்தில் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தற்போது மேல்மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.


குறிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.