ஆங்கிலம் என்பது ஒரு மொழி மாத்திரமே ! அது அறிவுப்புலம் இல்லை.


ஆங்கிலத்தினை ஒரு புலமைப் பரம்பலாகவோ, தகைமை மற்றும் தேர்ச்சிப் பரப்பாகவோ காண்பது அபத்தமானது. உலகமானது மேற்கு சக்திகளின் நியமங்களுக்குள் இயங்கும் வரையான காலம் மாத்திரம் தான், ஆங்கிலம் மீதான தற்போதைய பார்வை இருக்கும். ( இவ் வடிவம் விரைவில் மாறக்கூடும் )

ஆகவே தமிழ் ஆங்கிலத்திற்கு சற்றளவேனும் குறைந்த மொழியல்ல, அதே போல் தென் பூகோள நாடுகளின் கருத்தியல்களும் வட பூகோள நாடுகளின் கருத்தியல்களிலிருந்து சற்றளவேனும் குறைந்த ஒன்றல்ல. இவ் மனநிலையை நாம் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக எம் கல்விச் சமுகமானது சட்டம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், முகாமைத்துவம், கலை என அனைத்துக் கல்விப் பாடத்திட்டங்களையும் தமிழில் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிவாண்மை உட்கூறுகளினை உடனடியாகக் கட்டமைக்கக் கடவோம். அதற்கு முதலில் எங்கள் மொழியில் கல்வியைப் பயில்வோம்.
"English is a language, not Knowledge "
" இவ் விடயப்பரப்பானது யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை பற்றிய உரையாடலினை மையமாகக் கொண்டு வரையப்பட்டது"

ம.சோமபாலன்,
மாணவன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.