மக்கள் கண்ணீர் மல்க மலர் தூவி விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்!📸

 யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றையதினம் மாலை 6.05 மணி முதல் தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், முல்லைத்தீவு - விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.  துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ள மக்கள் கண்ணீர் மல்க மலர் தூவி சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த மாவீரர்களுக்கும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மேலும், இந்த முறை மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் வழமைக்கு மாறாக அதிக அளவிலான மக்கள் பங்கேற்று தமது அஞ்சலி செலுத்துவதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.