யாழ் பல்கலைக்கழக மாவீரர் நினைவுத் தூபியில் நினைவேந்தல் !📸

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலில் இடம்பெற்ற  கண் கலங்க வைத்த புகைப்பட அடையாளம்.யுத்தத்தில் உயீர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் இன்றையதினம் (27-11-2023) யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, மாவீரர்கள் நினைவாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.