எமது தேசியத் தலைவருக்கு இனிய அகவை தின வாழ்துக்கள்


 எம் இனத்தின் அடையாளம் தமிழினம் இ௫ந்து கொண்டு இ௫க்கும் வரை எம் இதயங்களில் வாழ்ந்து கொண்டி௫ப்பாய்

அகவை 69❤️
"கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன் 
காலத்தினால் எமக்காக 
பரிசளிக்கப்பட்டவன் 
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் - பாரில் 
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

 
ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் - உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய 
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன் 
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் - தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு 
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன் 
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே 
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

 

தாயைப் போல எம்மைக் 
காத்து வந்த தாயுமானவன் 
தாயவனின் நினைவை ஏந்தி
தாயிழந்த குஞ்சுகள் போல் 
தாங்க முடியா வலி சுமந்து
தவிப்புடனே வாழுகின்றோம் - சாகும் வரை 
தங்கள் தடம் பற்றியே வாழ்ந்திடுவோம்
தரணியிலே நீங்கள் பிறந்த
இத்திருநாளில் கூறுகின்றோம்...
இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் அண்ணா!

-நிலாதமிழ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.