ஆணும் பெண்ணும் அதிரடி கைது!

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்.சி வீதி, திருகடலூர் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்றையதினம் (11-11-2023) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழர் பகுதியில் ஆணும் பெண்ணும் அதிரடி கைது! பொலிஸாரிடம் சிக்கிய பொருள் | Man And Woman Arrested With Ganja In Trincomalee

குறித்த நடவடிக்கையின் போது, 10 கிலோ 610 கிராம் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் 43 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டு சந்தேக நபர்களுடன் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.