ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி!

 இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி! | Tax Effective From January In Sri Lanka

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

இதன் ஊடாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி! | Tax Effective From January In Sri Lanka

வரிகளை அதிகரிப்பது போல், வரி கட்டாதவர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதற்கு வரி தொடர்பான வலையமைப்பை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த முடிவு இலங்கையின் நிதி நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.