சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு!
கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இராமநாதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 2,800 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதே வேளை தப்பிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்யம் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை