யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்!


ஐஸ் போதைப் பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் நெடுந்தீவில் பதிவாகியுள்ளது.


நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குறித்த இளைஞன் வெளியூரில் வசிக்கும் தனது உறவினரின் வீட்டை பராமரித்து வந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை குறித்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் ”ஐஸ் போதை பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.