நெஞ்சை தழுவும் ஈகம்...!
கல்லறையே கல்லறையே விழித்தெழுவாயா!
கலங்கரை விளக்காய் உயிர்த்தெழுவாயா!
கார்திகையே கார்த்திகையே துளிர்த்தெழுவாயா!
நெஞ்சறை நினைவில் விழுதெறிவாயா!
அப்பாவின் குரல் அங்கே,கேட்கிறதே
அடிநெஞ்சில் அனலாய் அது சுடுகிறதே சுடுகிறதே
மகளே மகளே உந்தன் ஈரம் நனைக்கிறதே
மகத்தான நாளில் என்னை இணைக்கிறதே
உயிரே உயிரே உந்தன் இராகம் கேட்கிறதே
உயர்வான நாளில் என்னை அணைக்கிறதே
தந்தையே தந்தையே உங்களின் பாசம் தழுவுறதே
அழகான அழகான தலாட்டில் தினம் தினம்
நனைகிறதே
மகளே மகளே எங்களின் ஈகம் வென்றிடுமே
தீராத தீராத தமிழரின் தாகம் தணிந்திடுமே
வீழாதே வீழாதே எங்களின் தீரம் நிமிர்ந்திடுமே
அழகான அழகான ஈழத்தின் கதவு திறந்திடுமே
அப்பாவே அப்பாவே உங்களின் வீரம் சுடுகிறதே
உயிரான உயிரான தேசத்தில் தீயாய் எழுகிறதே எழுகிறதே...
✍️தூயவன்
கருத்துகள் இல்லை