நல்லூரில் மாவீரர் நினைவு வளாகம்📸
இன்று யாழ்.நல்லூரில் 24,379 மாவீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகள் கொண்ட நினைவாலயத்தில் மாவீரர் நினைவேந்தல் வார தொடக்க நிகழ்வு இடம்பெற்றது.
1982 நவம்பர் 27 லிருந்து 2009 மே 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் களமாடி வித்தாகியவர்களில் விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகள் கொண்ட நல்லூர் நினைவாலயத்தில் தாய் மண்ணின் விடியலுக்காய் சிவபாதம் எல்லாளன், சிவபாதம் உருத்திரா, சிவபாதம் சுகாசினி ஆகிய தனது மூன்று பிள்ளைகளினை உவந்தளித்த தாய் சிவபாதம் இந்திரவதி அவர்கள் முதன்மைச்சுடரினை ஏற்றி வைக்க எமது வரலாற்றினையும் எமது வீரமறவர்களின் பாரம்பரிய நடுகல் வழிபாட்டு முறையினையும் அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் நோக்குடன் நினைவாலயம் நிறுவப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது!
கருத்துகள் இல்லை