உலகே காத்திருங்கள் பகை முடிப்போம்.!

நேற்று வரை இருந்த நாடு
எம்மோடில்லை
நெஞ்சிருந்த மாவீரம்
நம்மோடில்லை
கையிருந்த ஆயுதங்கள்
அருகோடில்லை
களமுனையில் அருகிருந்தோர் உயிரோடில்லை
கொற்றப் பெரும் தலைவன்
அருகே இல்லை
உற்ற தளபதிகள் கதையே
இல்லை
சுற்றி வாழ்ந்த மக்கள்
சுற்றம் இல்லை
சுதந்திர காற்றும் எங்கள்
மூச்சில் இல்லை
எத்தனை வலி சுமந்தோம்
எங்கே


போவோம்
அத்தனை கொடுமைக்கும்
என்ன செய்வோம்
நித்தமும் ஓர் நினைவே
சுற்றும் எம்மில்
மெத்தப் பெரும் தலைவன்
உணர்வாய் நெஞ்சில்
ஒரு நாள் நிலம் வெடிக்கும்
உண்மை என்போம்
திரு நாள் தேர் ஏறித்
திரும்பும் என்போம்
உலகே காத்திருங்கள்
பகை முடிப்போம்
தனியே தமிழ்ஈழ
நிலம் பிடிப்போம்
கவிப்புயல் சரண்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.