வரியுடை தரித்த தமிழ்..!!
எழு தமிழ் வானில்
எங்களின் கொடியும்
விண்ணினை முட்டும்
முகிலுடை தரித்த தமிழே
கடலினில் எங்கள்
கைகளும் ஒங்கி
கரமதில்
என்றும்
என்றும்
மீன் வளம் அள்ள
கடலுடை தரித்த தமிழே
தடுக்கவே முடியா
தடைகளை எல்லாம்
தகர்த்துமே நீக்கி
தகைமைகள் சேர்க்க
கருமுடை தரித்த தமிழே
நொடியினில் படையின்
கவசமே நீக்கி
விடைகளின் முடிவில்
கேள்விகள் கேட்க
குத்துடை தரித்த தமிழே
ஆயிரம் உனக்கு
ஆடைகள் எனினும்
வரியுடை தரிக்கும்
பெருமை கொள் தமிழே
வரியுடை தரித்த தமிழே...
வாழ்த்துக்கள் அகவை நாளில்.
-கவிப்புயல் சரண்-
கருத்துகள் இல்லை