பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023!📸

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

 பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடரினை தமிழீழத் தேசத்தின் எங்கள் தானைத்தலைவனின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா.ஈழப்படையணியின் போர்க்களம் பல கண்ட புறநானூற்று வீரத் திருமகன் பிரிகேடியர் சொர்ணம் அண்ணா.தலைவனைக் காத்து நின்ற காப்பரண்.ஈழ மண்காத்து வீரமுடன் விதையாக வீழ்ந்த பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள்.தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.