சிக்கியது விபசார விடுதி!!
இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என கூறி விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் திங்கட்கிழமை (13) கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 32 வயதுடைய பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை