அப்படியா....!!
த-மிழீழ விடுதலைப் பு-லிகள் பற்றிய இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வகையறாக்களின் நிலைப்பாடும் Swasthika Arulingam இன் நிலைப்பாடும் வெவ்வேறானவையல்ல. ஏன், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் முதற்கொண்டு தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களின் நிலைப்பாடும் அது தான். என்ன வாக்கரசியலுக்காக தழிரசுக்கட்சியினர் அந்நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில்லை.
பு-லிகளை எதிர்ப்பது அரசியல் தற்கொலைக்கு சமம் என்பதை தமிழரசுக்கட்சியினர் நன்குணர்ந்தவர்கள். அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில் புலி நீக்க அரசியலை சுமந்திரன் கையிலெடுத்திருந்தாலும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுமந்திரனின் அரசியல் தோல்வி அவரது நிலைப்பாட்டில் தற்காலிக நிறுத்தத்தைக் கொடுத்தது.
ஆனால் தமிழரசுக் கட்சியின் கொள்கை என்னமோ ஒன்றுதான். சம்பந்தன் கிளிநொச்சிக்கு வந்தால், "பு-லிகள் மாவீரர்கள்" என்பார். மதவாச்சி தாண்டி கொழும்புக்குப் போனால், "பு-லிகளின் கொலைப் பட்டியலில் நானும் இருந்தேன்" என்பார்.
சுவாஸ்த்திகா, நளினி இரட்ணராஜா, அம்பிகா, ரட்ணம் ஹூல், சுரேன் இராகவன், முத்தையா முரளிதரன் போன்றவர்களை விட ஆபத்தானவர்கள் இரட்டை நாக்குக் கொண்ட தமிழரசுக் கட்சித் தலைவர்கள். ஏனெனில் தமிழர்களது பிரதிநிதித்துவத்தை வகிப்பவர்கள் இவர்கள் தான்.
பதிவு
கந்தசாமி கமலாதேவி செந்தூர்வேல்
கருத்துகள் இல்லை