இப்படிப் பேசுங்கள்!!
இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்குமே என்ன பிடிக்கும் என்று தெரிஞ்சு பேசினால் பிரச்சினையே வராது. காரணம், யாருக்குமே தங்களைக் குற்றம் கண்டு பிடித்தால் , தவற்றைக் குத்திக் காட்டிச் சொன்னால் பிடிக்காது . அது சரி, இது பிழை என்பதைத் தாண்டி தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பாது . அது படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோர் மனநிலையும் ஒன்றே. அப்படி சொல்லி விட்டால் அவர்கள் அதை சரி என்று நிரூபிக்க ஆதாரங்களைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். அதை எப்படியாவது சரி என்று காட்டி விட வேண்டும் என முயற்சிப்பார்கள். தான் தவறு செய்யவில்லை, தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிப்பதற்காக.
உண்மையில் என்னவென்றால் அவர்கள் தவறு என்று தெரிந்து செய்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அது சரி என்று பட்டதால் தான் செய்தே இருப்பார்கள், ஆனால், அது மற்றவர் பார்வைக்கு, ஏன் மற்றவர்களுக்குத் தவறாகத் தெரியும் பட்சத்தில் அதை தெரியப்படுத்தும் போது மனசு அதை இலகுவில் ஏற்றுக் கொள்ளாது. அதை மறுக்கவே செய்யும். அதையே அவர்கள் நேசிக்கும் உற்ற நண்பர்கள் எடுத்துக் கூறும் பட்சத்தில் மெதுவாக அதை ஏற்றுக் கொள்வார்கள். காரணம் அவர்களை இவர்கள் நம்புவதால் சாதகமானவர்கள் என்று எண்ணுவதால் மட்டுமே அது.
சொல்லபட்ட கருத்தை விட சொல்லப்படும் நபரை அவர்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டால் தான் அவர்களால் சொல்லப்படும் , கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். மனிதர்களின் மனநிலையை, முதலில் அந்தச் சூழலை அவர்களுக்குச் சாதகமாக மாற்றினால் மட்டுமே அவர்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் அங்கீகரிக்கும்.
நாம் ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்கும் போது பொதுவாக நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள், உங்கள் உடை பிரமாதமாக இருக்கிறது என்று தொடங்கும் போது மனது லேசாக மாறி, இறுக்கம் தளர்த்தி மகிழ்ச்சியாக பேசுவதைக் காது கொடுத்து கேட்கத் தொடங்குவார்கள். எடுத்த உடனேயே உங்கள் உடை எனக்குப் பிடிக்கவில்லை, இதை எங்கே வாங்கினீர்கள்? என்று பேசிப் பாருங்கள். எப்படி பெரிய ஆளாக, பக்குவப்பட்டவராக இருந்தாலும் உங்களுக்குச் சாதகமாக இருக்கவே மாட்டார்கள். எங்கள் பேச்சை ஒருவர் கேட்டு நடக்கிறார் என்றால் ஒன்று எங்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். இல்லை எங்களால் எதாவது ஆக வேண்டும். இது நீண்ட நாளுக்கு சாத்தியப்படாது .
முதலில் பேச்சை பொசிட்டிவாக ஆரம்பித்தாலே அவர்கள் மனதில் இடம் பிடித்து விடலாம். காதலிக்கும் போது பாருங்கள், எதைச் சொன்னாலும் காதலன் சொல்வது எல்லாமே காதலிக்குப் பிடிக்கும். அதே போல காதலி சொல்வது எல்லாமே காதலனுக்கு இனிக்கும்.
ஆனால் அது எல்லாம் ஒருவரின் மனதில் இடம் பிடிக்கும் முயற்சியின் தொடக்கம் . உங்கள் சம்மதம் , உங்கள் பாராட்டு , உங்கள் அங்கீகரிப்பு இவை எல்லாம் தான் அந்த நபர் உங்களை ஏற்றுக் கொள்ள தொடங்கும் இடமே.
எந்தக் குறை, குற்றசாட்டை முன் வைக்க முதல் அவற்றில் உள்ள நிறைகளைப் பாராட்டுக்கள், சிறப்புகளைச் சொல்லுங்கள் , அதன் பின் இன்னும் கொஞ்சம்.. இப்படி செய்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டும் போது பெரிதாக அவை குறையாகத் தெரியாது.
நாம் ஒன்றை வசப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு பிடித்ததை தான் செய்ய வேண்டும், எங்களுக்குப் பிடித்ததைச் செய்தால் அது அவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. எப்படி ?
ஒருவருக்கு அறிமுகம் செய்யும் போது என் பெயர் என்னவென்று சொன்னால் அவர்கள் தங்கள் பெயர்களை சொல்லி விடப் போகிறார்கள்.
நாம் மீனைப் பிடிப்பது என்றால் அதற்குப் பிடித்த உணவைப் போட வேண்டும், பறவையாக இருந்தால் அவற்றுக்குப் பிடித்த தானியத்தை தான் போட வேண்டும், இது வாழ்வில் மிகச் சாதாரண விடயம் . ஹோட்டலுக்கு போனால் எங்களோடு வந்தவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு ஓடர் செய்ய வேண்டும். எங்களுக்கு பிடித்ததை ஓடர் பண்ணினால் , கூட வந்தவர் அதைச் சாப்பிடவில்லை என்றால் எப்படி ? கொஞ்சம் யோசியுங்கள்.
அதனால், குறைகளைப் பார்க்கும் முன்னர் நிறைகளைப் பாராட்டுவோம்.
பாமா இதயகுமார்
கனடா.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை