ஓயமாட்டோம்!


வரிவரியாய் வரும் அழகில்

கருவின் குழந்தையும் குதூகலிக்கும்!

குற்றாள அருவியாய் மனமெல்லாம்

சில்லென்று குளிரடிக்கும்!


உரிமைக்காய் உயரும் குழல்களில்

உங்கள் உயிர்கள் நெருப்பாகி தகதகக்கும்!

வரிகளின் கோடுகளில் உறுதியான

புலியின் பார்வை நேர்கோடாய் நிற்கும்!


உறுதிகுலையாத உங்கள் பயணத்தில்

உண்மை இருந்தது!


இறுதியாக உயிர் பிரிகையிலும் மண்ணின் காதல் சுரந்தது!


உங்கள் போர்நெறியில் நேர்மை இருந்தது!


வாழ்வின் பொறிமுறையில் தலைவன் ஒழுக்கமே ஒளியாய் தெரிந்தது!


தலைகுனியா தமிழ்படையாய்

தலைவன் கொள்கை வென்றது!


விடுதலையே இலக்கு

என்பதால் 

சுடுகலன் ஓயும் வரை

தடுமாறாத தாய்நிலத்தின்

பிடிப்பு இருந்தது!


உங்கள் இதயத்துடிப்பு

இன்னும் உறங்கவில்லை!


அகிலத்தமிழரின் அடிநாதமாய்

ஒலிக்கிறது!

ஒருபோதும் ஓயோம் என்ற

ஓர்மத்தை

விதைக்கிறது!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.