முகநூலுக்கு கதவுகளிட்டிருந்தேன் மீண்டும் அகம் திறக்க ஆசை !
நீ இலக்கணமா
பொத்தகமாய் நீ
பக்கங்களைப் படித்தும்
தர்க்கங்களில் தடுமாறி
விளக்கங்கள் இன்றி
முழக்கமிடுகின்றது உன்
அழுத்தவரிகள்.
செறிவிழந்த சொற்களா
சேராத சொற்களா
இயல்பில் இணையாத
விகாரப் புணர்ச்சியால்
மெய்யும் கெட்டு
உயிரும் உதிரும்
வழுக்களை வடிப்பதேன்.
பொத்திய அகம் புது
அத்தி ஆயங்களை
கத்திக்கொண்டும்
கத்தி கொண்டும்
கரு அழிப்பதால் என்
புக்ககம் கிழியலாம்
பொத்தகத்தை புதிதாய் எழுது
ப. தியான்
கருத்துகள் இல்லை