மாயமான 180 மாணவர்கள் மீட்கப்பட்டனர்!

 


ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தின் போது சிக்கித் தவித்த சுமார் 180 பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை இராணுவமும் பொலிஸாரும் மீட்டுள்ளதாக பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

60 மாணவர்களும் 120 மாணவிகளும் அங்கிய குழுவினர் 6 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை நடைபயணத்தைத் தொடங்கிய மாணவர்கள், மூடுபனி மற்றும் மழை காரணமாக திரும்பி வரும் வழியில் தொலைந்து போனதாக அவர் குறிப்பிட்டார்.

ஹந்தான மலைத்தொடருக்கு சென்றிருந்த குறித்த மாணவர்கள் குழு மோசமான வானிலை காரணமாக அங்கு சிக்கித் தவித்தனர்.

இதனையடுத்து, மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போன நிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஹந்தான, பல்கலைக்கழக மாணவர்கள் மலையேறும் பிரபலமான இடமாகும். இப்பகுதியில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றங்களால் ஒவ்வொரு ஆண்டும் சில மாணவர்கள் தொலைந்து போவதுடன் பின்னர் மீட்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.