மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியை தாக்கி கொன்ற சக கைதிகள்..!


 மட்டக்களப்பு சிறைச்சாலையின் அறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மற்ற கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற பிரேத பரிசோதனையில். மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, ​​அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.