பிரான்சில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலும் தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வும்!

 


பிரான்சு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு, பிரான்சு – பிராங்கோ தமிழ்ச்சங்கம்

  லாக்கூர்நேவுடன் , லாக்கூர்நேவ் வர்த்தகர்கள், லாக்கூர்நேவ் மாநகரசபையுடன் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வும் 20.01.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு 6-8 la Place Claire Lacombe 93120 La Courneuve திறந்த வெளிக்கலாசார வெளியில் பொங்கலும், அருகில் அமைந்துள்ள Salle Guy-Moquet 119 Av Paul Vaillant Couturier 93120 La Courneuve மண்டபத்தில் கலைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

93 பிரிவு மாவட்டத்தில் லாக்கூர்நேவ் நகரமானது ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள், வர்த்தக நிலையங்கள், ஆன்மீக வழிபாட்டுத்தளங்கள் கொண்டதொரு பிரதேசமாகும். இப்பொங்கல் நிகழ்வில் அனைத்துத் தமிழ்மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு  தமிழர் கட்டமைப்புகளாலும், லாக்கூர்நேவ் மாநகரசபையாலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.