ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் முற்பட்ட நான்கு வெளிநாட்டவர்கள் பலி !


ஸ்பெயின் நாட்டின் கடற்கரையில் மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ள நிலையில் இவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் நான்கு பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர். இதுதொடர்பாக, ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நிலப்பரப்புக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.