யேர்மனி மக்கள் அகதிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!


யேர்மனி நகரமொன்றில், அகதிகள் தங்குவதற்காக வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

கிழக்கு யேர்மனியிலுள்ள Gera என்னுமிடத்தில், அகதிகள் தங்குவதற்காக வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சனிக்கிழமை வலது சாரி அமைப்பொன்றைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அத்துடன், 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 150 பேர் நகரம் முழுவதும் ஊர்வலமாகவும் வந்தார்கள்.விடயம் என்னவென்றால், Wismut மருத்துவமனை என்னும் மருத்துவமனை அமைந்திருந்த இடத்தில், தற்போது அகதிகள் தங்குவதற்காக வீடுகள் கட்ட நகர அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள். அந்த கட்டிடங்களில் 200 அகதிகளை தங்கவைக்கமுடியும்.

ஆனால், ஒரு காலத்தில் இருகரம் நீட்டி அகதிகளை வரவேற்ற ஜேர்மனியில், இப்போது வலதுசாரிக் கொள்கைளுக்கு ஆதரவு அதிகரித்துவருவதால், அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவருவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.