போர் களத்திற்கும் அறம் உண்டு!

 


சிலையை நன்கு உற்றுப் பாருங்கள்! 

ஓர் சோவியத் ரஷ்ய ராணுவ வீரரின் சிலை. கையில் ஒரு குழந்தையை ஏந்தி இருக்கிறார். சிலை இருக்குமிடம் டெர்ப்டவர் பூங்கா (Terptower Park), பெர்லின், ஜெர்மனி. 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வீழ்த்தி சோவியத் செம்படை வென்றதன் நினைவுச் சின்னம். ராணுவ வீரரின் கையில் குழந்தை எதற்கு?


போரின் கடைசி அத்தியாயத்தை சோவியத் செம்படை எழுதிக் கொண்டிருந்த போது சோவியத் தளபதி மார்ஷல் ஜூக்கோவ் ஓர் உத்தரவிட்டார். 'எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்காக பால் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். பெர்லினுக்கு பால் கொண்டு வர மத்திய பால் பண்ணைக்கு 25 லாரிகளை ஒதுக்கி வைக்குமாறு மேஷர் ஜெனரல் ஷிஷினுக்கு ஆணையிடப்படுகிறது. இது குறித்து ராணுவக் கவுன்சிலுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அனுப்ப வேண்டும்.'


இந்த சிலை சொல்லிக் கொண்டிருப்பது இந்தச் செய்தியை மட்டுமல்ல, சோஷலிசத்தின் உயர்ந்தபட்ச மனித நேயத்தையும்தான். யுத்தகளத்திலும் குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயுற்றோரை காக்கும் அறப்பார்வை சோவியத்துக்கு இருந்தது. 


ஆனால், இறுதி யுத்த காலங்களில் தமிழ் மக்கள் குழந்தைகள், பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இன்றி கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.