வீட்டில் செல்வம் அதிகரிக்க வெண்கடுகு பரிகாரம்!


 நாம் பயன்படுத்தும் பல வகை உணவுப் பொருட்கள் மூலிகையாகவும் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஓரளவிற்கு நாம் பயன்படுத்தும் சில பொருட்களில் உள்ள தெய்வீகத் தன்மையை உணர்ந்து அதை நாம் பணம் வரவிற்கு பயன்படுத்தி வருந்தாலும் கூட இன்னும் பல வகையான மூலிகைகளை பயன்படுத்தி பணத்தை ஈர்க்க முடியும். 

அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தி பொருட்களை வைத்து என்று சொல்லப்படுகிறது. இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வெண்கடுகை வைத்து எப்படி நாம் பணத்தை ஈர்க்கும் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப் போகிறோம். இந்த வெண்கடுகுடன் நாம் எப்போதும் பயன்படுத்தும் இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த பரிகாரத்தை செய்ய போகிறோம். அது என்ன பொருள் அதற்கான மகத்துவம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். 


வீட்டில் குபேர சம்பத்து உருவாக வெண்கடுகு 


கடுகில் மூன்று வகையான உண்டு.

 இதில் கருப்பு கடுகானது கண் திருஷ்டி போன்றவற்றை நீக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். வெண்கடுகு மகாலட்சுமி தாயார், குபேர சம்பத்து நிறைந்த பொருளாகவும் இது பணம்ஈர்பதற்கும் அதிக அளவில் பயன்படுகிறது. 

இதில் இன்னொரு வகை உண்டு அது கடுகு நாய். இதை பெரும்பாலான பயன்பாட்டிற்கு நாம் எடுத்துக் கொள்வதில்லை. இப்போது இந்த வெண்கடுகை வைத்து தான் நாம் பணத்தை ஈர்க்க கூடிய இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம்.

 இந்த வெண்கடுகு மகாலட்சுமி தாயார் குபேரர் இருவருக்கும் உரிய பொருளாக பார்க்கப்படுகிறது. குபேர பூஜை செய்யும் போது இந்த வெண்கடுதையும் ஏலக்காயும் ஒன்றாக சேர்க்காமல் பூஜை செய்வது கிடையாது. அதே போலத் தான் நாமும் வீட்டில் இந்த வெண் கடுகு ஏலக்காய் உடன் இன்னும் ஒரு பொருளை சேர்க்க போகிறோம் அது வேறொன்றுமில்லை பச்சைக் கற்பூரம் தான். வீட்டின் குபேர மூலையில் பூஜை அறை அமைந்து விட்டால் செல்வ வளம் அதிகரிக்கும்.

 ஒரு வேளை அங்கு அமையாத பட்சத்தில் அல்லது குபேர மூலையிலே பூஜை அறை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஒரு கிண்ணம் அல்லது சொம்பை எடுத்துக் கொள்ளுங்கள். சில்வர் தவிர எந்த கிண்ணத்தை வேண்டுமானாலும். 

பயன்படுத்தலாம் அதில் 50 கிராம் தென்கடுகை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 10 கிராம் ஏலக்காய், 10 கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து வானம் கலர் என்று சொல்லப்படும் நீல நிறத்திலான துணியை வைத்து இந்த கிண்ணத்தை இறுக்கமாக மூடி வைத்து விட வேண்டும்.

 இது பூஜை அறையில் இருக்க வேண்டும். பூஜை செய்யும் போது இதற்கு கற்பூர தீபாராதனை காட்டலாம். இதை அடிக்கடி மாற்ற வேண்டியது கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். 

ஆனால் இந்த பொருட்கள் ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் இருக்கும் போது குபேர சம்பத் உருவாகி பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

 குபேர சம்பத்து உருவாக செய்யக் கூடிய இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.