கன மழை தொடர்பான எச்சரிக்கை!!

 


நாட்டின் வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியாகும்.

குறித்த காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைந்ததால் நாட்டில் இந்த நிலையில் உருவாகியுள்ளதாக என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் எனவும் 

எனவே,   மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.