பாரியளவான பீடி இலைகள் சிக்கின!

 


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 
நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றினை சோதனை செய்த போது 1,955 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறியை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.