கண்டியில் உயிரிழந்த நபரொருவருக்கு கொவிட் தொற்று!

 


சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 65 வயதுடைய நபர் ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை உலப்பனையைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, தடுப்பூசி மூலம் ஏற்பட்ட பாதுகாப்பு உடலிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.