நாட்டில் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு!

 


நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை இரண்டு நாள்கள் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நத்தார் பண்டிகை  திங்கட்கிழமை (25) கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, திங்கட்கிழமை (25) மற்றும் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.