“யாழில் மலையகத்தை உணர்வோம்”!

 


“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்கிற தொனிப்பொருளில் நிகழ்வொன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கடந்த 30 ம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தில் மலையக தமிழ் மக்களின் கடந்தகால மற்றும் தற்போதைய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ் சிவில் அமைப்புகள் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வு காலத்தின் தேவையானது. 


இங்கிருந்த பிரிவுகளில் “மனித நூலகம்” கவர்ச்சியாகவும் கதை சொல்லும் உத்திகள் மிகுந்ததாகவும் இருந்தது, இத்தகைய மனித நூலகங்கள் மாணவர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருந்ததையும் கவனித்தேன். இவ்வாறான கதை சொல்லிகள் நமக்குத் தேவை. எங்களுடைய பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் இப்படிச் சொன்ன பல வரவாற்று, அரசியல் கதைகள் இன்னமும் நினைவில் இருக்கிறது. 


நாளை 03 ம் திகதி யாழில் “மலையகத்தை உணர்வோம் நிகழ்வு” நிறைவடைய இருப்பதால் வாய்ப்புள்ளவர்கள் சென்று வருவதோடு மட்டுமன்றி பள்ளி செல்லுகிற உங்களுடைய பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுங்கள். எப்பொழுதும் கூறுவதைப்போல இந்த நாட்டில் வாழுகிற ஒரு சமூகம் இன்னும் ஒரு சமூகத்தின் வலிகளையும் வாழ்வியலையும் அறிந்து கொள்ள விளைகிற போதே அமைதியும் நின்மதியும் கிட்டும். 


நாம் அன்றாடம் காலையில் அருந்துகிற தேநீரின் பின்னும், இந்த நாட்டின் அன்னியச் செலாவணியின் பின்னும் புதைந்து போன, ஒரு இனக்குழுவின்மீது திணிக்கப்பட்ட அநீதிகளையும் மறுக்கப்பட்ட உரிமைகளையும் நம் இளைய சமூகம் புரிந்து கொள்ளுவதற்கு இந்தப் பயணமும் உதவும். 


கல்வி என்பது வெறுமனவே புத்தகங்களில் மட்டும் படிப்பதல்ல !!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.