துன்பத்தை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

 


வாழ்க்கையில் நமக்கு நேரும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் நம்மை காக்கக் கூடிய தெய்வங்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் இந்த கால பைரவர். இவரை மனதார நினைத்து வணங்கும் போது நம்முடைய சகல பிரச்சனைகளையும் தீர்த்து இன்பமாக வாழ வைப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியான காலபைரவரை நாளை செவ்வாய்க்கிழமையுடன் வரும் தேய்பிறை அஷ்டமியில் எப்படி வணங்கினால் நல்லது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம். துன்பங்கள் தீர கால பைரவர் வழிபாடு செவ்வாய்க்கிழமை என்றாலே தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது அதே போல் அஷ்டமியில் வளர்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என இரண்டு உண்டு. கடன் பிரச்சனை நம்முடைய துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் தேய்ந்து போக தேய்பிறை அஷ்டமி உகந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய அற்புதங்கள் நிறைந்த நாளைய தினத்தில் காலபைரவரை நம்முடைய வீட்டில் இருந்தே எளிமையாக வழிபட்டு நம் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த வழிபாடை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் காலபைரவர் படம் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவரை மனதார நினைத்துக் கொண்டு ஒரு தீபத்தை ஏற்றி விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருந்து வழிபாட்டை முடித்த பிறகு உணவு எடுத்துக் கொள்பவர்கள் அப்படி விரதம் இருக்கலாம் முடியாதவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை இருங்கள் தவறில்லை. அதே போல் இந்த வழிபாட்டை செய்ய காலை பிரம்ம முகூர்த்த நேரம் உகந்ததாக சொல்லப்படுகிறது. இதில் வழிபட முடியாதவர் காலை 6 மணியிலிருந்து 8. 45 மணி வரை செய்யலாம். இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை செய்யலாம். இந்த நேரங்களை தவற விட்டவர்கள் அன்று மாலை 5 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் வழிபாட்டை செய்து முடித்து விடுங்கள். கால பைரவர் வழிபாடு உச்சி கால வேளையில் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் மதியம் 12 மணி முதல் 1:30 வரையிலான இந்த நேரத்தில் வணங்குவது நல்ல பலனை தரும். காலபைரவர் படம் இருந்தால் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி அல்லது செம்பருத்தி பூவை சூட்டுங்கள். இவருக்கு நெய்வேத்தியமாக மிளகு சாதம் சர்க்கரை பொங்கல் மிளகு வடை போன்றவற்றை ஏதேனும் ஒன்றை படைக்கலாம். இவையெல்லாம் செய்த பிறகு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வையுங்கள். அதற்கு விளக்கிற்கு முன் நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ஓம் கால கால பைரவாய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்த பின்பு நெய்வேத்திய பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் மாலை ஆலயத்திற்கு சென்று கால பைரவரையும் வணங்கி வாருங்கள். 


இந்த முறையில் கால பைரவரின் நாமத்தை சொல்லி மனதார நினைத்து வணங்கும் போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சகல பிரச்சனைகளும் தீர்ந்து விடும். குறிப்பாக எதிரி தொல்லை, கடன் தொல்லை, தீய சக்திகளின் தாக்குதல் போன்ற எதுவும் நம்மை நெருங்க கூட முடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறையில் வழிபடுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.