உள்ளூர் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!!


கல்கிரியாகம , கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பிரதேசத்தில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 45 வயதுடைய நபரொருவரும் கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளின் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.