வெள்ளம் நிறைந்த குழியில் மூழ்கி குழந்தை பலி!!

 


கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன் தினம் (21) மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.