திருகோணமலை;யிலும் வெள்ளப் பாதிப்பு!!

 


நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் மழையால்  மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில்  திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.


குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை,அலஸ்தோட்டம், துவரங்காடு, கன்னியா ஆகிய பகுதிகள் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் திருகோணாமலை – கண்டி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக வீதியினூடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.