திருமண வீட்டில் அந்தரத்தில் தொங்கிய பெண்கள்!!

 


சமீபகாலமாகவே திருமணத்திற்கு முன்பு  பிரீ வெட்டிங் ஷூட் (Pre-Wedding) மற்றும் திருமணத்துக்கு பிறகு எடுக்கப்படும் புகைப்படங்கள், இளைஞர்களிடம் பிரபலமாகி வருகிறது

அந்த வகையில், சமீபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி இடம்பெற்ற திருமணம் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த திருமணம் தொடர்பில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

வீடியோவில் மண்டபம் ஒன்றில் மக்கள் கூடியிருக்கின்றனர். அங்கு மணமக்கள் நிச்சயதார்த்தத்திற்காக மோதிரம் மாற்றிக் கொள்ள தயாராகி இருக்கிறார்கள்.

வண்ண வண்ண மலர்கள், விளக்குகளின் அலங்காரத்தினால் முழு மண்டபமே சொர்க்கத்தைப் போல் காட்சி அளித்துள்ளது.

இதேவேளை அங்கு பெரிய பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்ற அலங்காரங்கள் ஒரு பக்கமும், சிறிய பெரிய விளக்குகள் மறுபக்கமும் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வில் ஆச்சரியம் என்னவென்றால் மேலாக சில பெண்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவதைகள் போல உடையணிந்து காட்சி அளிக்கின்றனர்.

அவர்கள் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்துவதற்காக அவ்வாறு தொங்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவின் நோக்கமே வானத்து தேவதைகள் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பது என வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்கள்.

எனினும், இணையவாசிகளோ இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் மிகவும் காட்டமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

பெண்களை இப்படியா அந்தரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் கட்டி தொங்கவிடுவது?' அவர்களும் மனிதர்கள்தானே? இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஒரு மனிதனை ஒரு காட்சி பொருளாக கருதுவது சரியா? 'என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த ஏற்பாடு பெண்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்தது போல் உள்ளதாகவும், இதனை செய்தவர்கள் மனநிலை குன்றியவர்களாகதான் இருக்க முடியும் என்றும் இணையவாசிகள் விளாசியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.