இலங்கை பெண் மாலைத்தீவில் கைது!


மாலைத்தீவில் பணி புரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர், சிசு கொலை குற்றச்சாட்டில் நேற்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் யூனுஸ் சோபா (Yoonus Sobah) தெரிவித்தார்.

தகவல்களின்படி, அந்த பெண் இரகசியமாக சிசுவை பிரசவித்து, அதனை ஒரு பைக்குள் இட்டு, பின்னர் அதைக் குப்பை கிடங்கில் போட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

குப்பை கிடங்கில் சிசு கண்டுபிடிக்கப்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக சிசு ஏற்கெனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட மாலைத்தீவு பொலிஸார், இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் மேற்படி பெண்ணை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.