துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் லொறி சாரதி ஒருவர் பலி.!
இச்சம்பவம் இன்று (18) மாலை தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நாரம்மல பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர், லொறியின் சாரதியை சோதனை செய்தபோது, பொலிஸ் உப பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை