2000 ரூபாவிற்கு மொத்த விற்பனை செய்யப்பட்ட கேரட் 1,200 ஆனது - போஞ்சி 600 ரூபா!


நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக கேரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் வியாழக்கிழமை(18) சடுதியாக 1000 ரூபாயாக குறைந்துள்ளது.


அதன்படி வியாழக்கிழமை (18) பேலியகொடை வர்த்தக நிலையத்தில் 1 கிலோ கிராம் கேரட்டின் மொத்த விலை 1000 ஆக பதிவாகியுள்ளது.


அதேவேளை, ஏனைய மரக்கறிகள் தொடர்ந்தும் 500 ரூபாவை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொடை வர்த்தக நிலையத்தில் இன்றைய தினம் சில மரக்கறிகளின் மொத்த விலை கிலோ விபரம் வருமாறு :-

கரட் 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரை

போஞ்சி 550 ரூபா முதல் 600 ரூபா வரை

கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரை

தக்காளி 200 ரூபா முதல் 300 ரூபா வரை

லீக்ஸ் 400 ரூபா

கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரை..

அதேவேளை, தம்புள்ள பொருளாதார நிலையத்திலும் வழக்கறி விலைகள் குறைவடைந்து வருகின்றன.. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மறக்குது விலைகள் ஓரளவு குறைந்துள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.