மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து!


 மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தில் இருந்து  கெப்பி மாநிலத்தில் உள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது, ​​நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


அதிக சுமை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


காணாமல் போனவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.


அண்மைக்காலமாக நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.