எயார்பஸ் A-330 -243 ரக விமானத்தை குத்தகை-ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானப் போக்குவரத்தில் எயார் பெல்ஜியமிடமிருந்து மற்றுமொரு எயார்பஸ் A-330 -243 ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் திரு.தீபால் பெரேரா இன்று (17) தெரிவித்தார்.
இது இரண்டாவது விமானமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்தது.
இரட்டை இன்ஜின் விமானத்தில் 22 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 240 எக்கனமி வகுப்பு இருக்கைகள் உள்ளன.
இந்த விமானத்தின் வருகையானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் விமான தாமதங்கள் மற்றும் இரத்துச் சம்பவங்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை